முன்னாள் சுகாதார அமைச்சரால் வவுனியா வடக்கு பொது அமைப்புகளுக்கு தளபாடங்கள் வழங்கி வைப்பு

வடக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் மருத்துவர் ப.சத்தியலிங்கம்  அவர்களின் மாகாண பிரமாண அடிப்படையிலான குறித்தொதுக்கப்பட்ட நிதியில் கொள்ளவனவு செய்யப்பட்ட தளபாடங்கள் பொது அமைப்புகளுக்கு நேற்று (08.11.2017) வழங்கி வைக்கப்பட்டன.

வவுனியா வடக்கு பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட மருதோடை பெண்கள் கிராம அபிவிருத்திச்சங்கம், கோவில்புளியங்குளம் கிராம அபிவிருத்திச்சங்கம், ஊஞ்சால்கட்டி கமக்காரர் அமைப்பு என்பவற்றிற்கு தளபாடங்கள் முன்னாள்  அமைச்சரால் வழங்கிவைக்கப்பட்டன.

இந் நிகழ்வில் இணைப்புச்செயலாளர்  சஜீவன் , இலங்கை  தமிழரசுக்கட்சியின்  வடக்கு பிரதேச முக்கயஸ்த்தர்களும்கலந்துகொண்டிருந்தனர்.

You might also like