இரணைமடுவிலிருந்து இராணுவம் வெளியேறவில்லை! இராணுவப் பேச்சாளர் தகவல்

கிளிநொச்சி – இரணைமடு குளத்தின் அருகில் நிலைகொண்டிருந்த இராணுவம் வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படும் செய்தியில் எவ்வித உண்மையும் இல்லை என இராணுவப் பேச்சாளர் ரொஷான் செனவிரட்ன தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இதை குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவிக்கையில்,

இராணுவ ரீதியான தீர்மானங்கள் மற்றும் தேவைகளுக்காக மட்டுமே இராணுவ முகாம்கள் இடமாற்றப்படும் எனவும், யாருடைய அழுத்தங்களுக்காகவும் இடமாற்றப்படாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இரணைமடு நீர்ப்பாசன திணைக்களத்திற்குச் சொந்தமான பகுதியில், நீர்ப்பாசன திணைக்களத்தின் விடுதிகளை தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்து இராணுவத்தினர் அங்கு நிலைகொண்டிருந்தனர்.

இந்த நிலையில், குறித்த பகுதி நீர்ப்பாசன திணைக்களத்திற்கு மிகவும் அத்தியாவசியமாகவும் காணப்பட்டதுடன், இதுகுறித்து முன்னெடுக்கப்பட்டு வந்த ஆலோசனைகளின் பிரகாரம், அவ்விடத்திலிருந்து இராணுவம் வெளியேறியுள்ளதாக அண்மையில் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

You might also like