முல்லைத்தீவு விவசாயிகள் முத்துஐயன் கட்டுக்குளம் தொடர்பில் குற்றச்சாட்டு

முல்லைத்தீவு – முத்துஐயன் கட்டுக்குளத்தின் புனரமைப்பிற்காக பெருந்தொகை நிதி ஒதுக்கப்பட்ட போதும், அதனை உரிய முறையில் மேற்கொள்ளப்படவில்லை என விவசாயிகளும், விவசாய அமைப்புக்களும் குற்றம் சாட்டியுள்ளன.

இது தொடர்பில் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

குறித்த குளத்தின் சில பகுதிகளில் உடைவுகள் ஏற்பட்டுள்ளன. முல்லைத்தீவு பாரிய நீர்ப்பாசனக் குளங்களில் ஒன்றான முத்துஐயன் கட்டுக்குளம் நீண்ட காலமாக புனரமைக்கப்படாலும், போதிய நீரை தேக்கமுடியாலும் காணப்பட்டது.

இந்த நிலையில் விவசாயிகளின் தொடர் கோரிக்கையை ஏற்று சுமார் 600 மில்லியன் ரூபாவிற்கு மேற்பட்ட நிதியில் புனரமைக்கப்பட்ட இந்த குளத்தின் வான் பகுதியில் பாரிய உடைவு ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பில் முல்லைத்தீவு மாவட்ட நீர்ப்பாசனத் திணைக்களம் மற்றும் முத்துஐயன்கட்டு நீர்ப்பாசனத் திணைக்களம் ஆகியவற்றில் கேட்டபோது,

குளத்தின் புனரமைப்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன. வான் பகுதி உடைவு ஒன்று காணப்படுகின்றது.

 

அத்துடன்,புனரமைப்பின் போது ஏற்கனவே இருந்த வான் கதவிற்கு அருகில் மற்றுமொரு வான் கதவு அமைக்கப்பட்டது. அதற்கிடையில் உடைவு ஒன்று காணப்படுகின்றது.

இதன் கட்டுமானப் பணிகளை மேற்கொண்ட ஒப்பந்தக்காரர்களுடைய பிடிபணம் இருக்கின்றது. இப்போது அந்த ஒப்பந்தக்காரர்கள் குறித்த வேலையை சீர் செய்வதற்கு உடன்பட்டு அந்த வேலையைச் செய்கின்றார்கள். ஆகவே இதில் விவசாயிகள் அச்சப்படத்தேவையில்லை என குறிப்பிட்டுள்ளது.

You might also like