வவுனியா திருநாவற்குளம் உமாமகேஸ்வரன் முன்பள்ளியின் கல்விக்கண்காட்சி

திருநாவற்குளம் உமாமகேஸ்வரன் முன்பள்ளியில் 10.11.2017  வெள்ளிக்கிழமை காலை 10.00 மணிக்கு  முன்பள்ளியின்  ஆசிரியர்  திருமதி.மீரா குணசீலன் அவர்களின் தலைமையில்  கல்விக்கண்காட்சி சிறப்பாக நடைபெற்றது.

இவ்விழாவின் பிரதம விருந்தினராக  வடமாகாணசபை உறுப்பினர் திரு ஜி.ரி. லிங்கநாதன் அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக வவுனியா நகரசபையின் முன்னாள் உப நகர பிதாவும் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் வவுனியா மாவட்ட பொறுப்பாளருமான திரு க. சந்திரகுலசிங்கம் (மோகன்), வவுனியா தெற்கு வலய முன்பள்ளி உதவி கல்வி பணிப்பாளர்  திரு.தர்மபாலன் ,  முன்பள்ளி மாவட்ட இணைப்பாளர் திருமதி அருள்வேல்நாயகி, அவர்களும் கௌரவ விருந்தினர்களாக  ஆட்டோ சங்கத் தலைவர் சி.ரவீந்திரன், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் நிர்வாக உறுப்பினர் திரு. ஜெகதீஸ்வரன், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் தேசிய அமைப்பாளர் திரு.யோகன், தனியார் பேருந்து போக்குவரத்து சங்க தலைவர் திரு.ரஞ்சன் முன்பள்ளி பிரதேச இணைப்பாளர் திரு.எஸ்.சசிகலா, தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் தலைவரும் மாவட்ட இளைஞர் கழக சம்மேளனத்தின் தலைவருமான     திரு.சுந்தரலிங்கம் காண்டீபன்,சமூக ஆர்வலர் திரு நாகராஜா தர்மலிங்கம், மாதர் அபிவிருத்தி சங்க தலைவி திரு. நகுலேஸ்வரம்பிள்ளை, தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் அமெரிக்க கிளை பொறுப்பாளர் திரு.கோபி மற்றும் உறுப்பினர்களான கெர்சோன், பிரதீபன், சதீஸ்  ஆகியோரும்  கலந்து சிறப்பித்திருந்தனர் .

இந் நிகழ்விற்கு புளொட் அமைப்பின் பிரித்தானியா கிளை உறுப்பினர் திரு.தர்மலிங்கம் நாகராஜா (பொக்கன்) அவர்கள் நிதி அனுசரணை வழங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது .

You might also like