வவுனியாவில் டெங்கு ஒழிப்பு செயற்றிட்டம்

டெங்கு நோயற்ற வவுனியாவை உருவாக்குவோம் எனும் தொனிபொருளில் டெங்கு ஒழிப்பு செயற்றிட்டம் ஒன்று வவுனியாவில் இடம்பெற்றுள்ளது.

குறித்த செயற்றிட்டம் இன்று காலை 9 மணியளவில் வவுனியா நகர பகுதிகளில் நடைபெற்றுள்ளது.

இதன்போது, வவுனியா நகரசபையுடன், வவுனியா நகர சிறு வியாபார சங்கமும் வவுனியா பொலிஸாரும் இணைந்து டெங்கு ஒழிப்பு சிரமதானப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.

 

அத்துடன், இலங்கையில் பல மாவட்டங்களில் டெங்கினால் பல நூற்றுக்கணக்கான உயிர்கள் காவு கொள்ளப்பட்டுள்ளன.

இந்த நிலையில், வவுனியா நகரத்தையும், மக்களையும் பாதுகாத்துக்கொள்ளும் நோக்கில் இந்த செயற்றிட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

You might also like