போர் முடிவடைந்தும் முள்ளிவாய்க்காலில் காணப்படும் யுத்த வடுக்கள்!

யுத்தம் முடிவடைந்து எட்டு வருடங்கள் கடந்த போதும் யுத்தத்தின் அழிவுகளும் அதன் சாட்சிகளும் அடையாளங்களாக முள்ளிவாய்க்காலில் இன்றும் காணப்படுகின்றன.

கடந்த 2009ஆம் ஆண்டு மார்ச், ஏப்ரல் மற்றும் மே ஆகிய மாதங்களில் அதியுச்ச போர் நடைபெற்ற இடங்களாக மாத்தளன், அம்பலவன்பொக்கணை, வலைஞர் மடம் முள்ளிவாய்க்கால் ஆகிய பகுதிகள் காணப்படுகின்றன.

குறித்த பகுதிகளில் மக்கள் மீள்குடியேறி எட்டு ஆண்டுகள் ஆகின்றபோதும் இன்றும் அந்த இடங்களில் போரின் அழிவுகள் அடையாளங்களாக காணப்படுகின்றன.

குறிப்பாக அம்பலவன்பொக்கணை, வலைஞர்மடம், புதுமாத்தளன் சாலை போன்ற இடங்களின் பிரதான வீதியாக காணப்படுகின்ற இரட்டைவாய்க்கால் சாலை வீதி இன்று வரை புனரமைக்கப்படாத மிக மோசமாக சேதமடைந்த நிலையில் காணப்படுகின்றது.

இதனைவிட வீதியின் இரு பக்கங்களிலும் யுத்தத்தின் சிதைவுகளை சுமந்த வீடுகள், ஏனைய கட்டடங்கள், மக்கள் உயிர் வாழ்வதற்கான ஆங்காங்கே அமைத்த பதுங்கு குழிகள் போரின் கொடூரத்தை சித்தரிக்கின்ற அடையாளங்களாக காணப்படுகின்றன.

இதேபோன்று முள்ளிவாய்க்கால் பகுதியில் அழிவுகளும் போரின் அடையாளங்களும் எட்டு வருடங்கள் கடந்தும் இன்றும் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

You might also like