வவுனியாவில் வறுமைக்கோட்டிற்குட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு துவிச்சக்கரவண்டி வழங்கி வைப்பு

வவுனியாவில் வறுமைக்கோட்டிற்குட்பட்ட 24 பாடசாலை மாணவர்களுக்கு வடமாகாண சபை உறுப்பினர் ப.சத்தியலிங்கம் அவர்களின் வடமாகாணசபையின் 2017ம் ஆண்டிற்கான பிரமான அடிப்படையிலான நன்கொடை நிதியின் கீழ் நான்கு லட்சத்தி எட்டாயிரம் ரூபாய் நிதியில் 24 துவிச்சக்கரவண்டிகள் இன்று (11.11.2017) காலை 9.00மணியளவில் இலங்கை தமிழரசுக்கட்சியின் மாவட்ட காரியலாயத்தில் வைத்து வடமாகாண சபை உறுப்பினர் ப.சத்தியலிங்கம் அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டன.

சத்தியலிங்கம் அவர்களின் இணைப்பாளர் பாலச்சந்திரன் சிந்துஜன் அவர்களின் தலமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி சுபாசினி சிவதர்சன் , வவுனியா வடக்கு வலய ஆலோசகர் சி.மகேஸ்வரன், தமிழரசு கட்சியின் உறுப்பினர்கள் , பாடசாலை அதிபர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

வவுனியா வடக்கு வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளிலிருந்து 14 மாணவர்களும் வவுனியா தெற்கு வலயத்திலிருந்து 10 மாணவர்களும் தெரிவு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

You might also like