வவுனியா பசங்க அமைப்பினரால் வறிய பாடசாலை மாணவிக்கு உதவிகள் வழங்கி வைப்பு

மடு பிரதேச செயலகத்திற்குட்பட்ட இரணைஇலுப்பைக்குளம் பகுதியில் தாய், தந்தையினை இழந்து சற்று மன நலம் பாதிக்கப்பட்ட அண்ணனுடன் வாழ்ந்து வரும் 10வயதுடைய சிறுமிக்கு வவுனியா பசங்க அமைப்பினரால் விடுக்கப்பட்ட வேண்டுகோளிக்கினங்க ஊடக நண்பர் ராஜ்குமார் அவர்களினால்  உடைகள், பாடசாலை செல்வதற்கான புத்தகப்பபை, சாப்பாத்து, 3000ரூபாய் பணம் என்பனவும் வெளிச்சம் அறக்கட்டளையினால் கற்றல் உபகரணங்களும் சாய் மெபைல் நெற் ( இரண்டாம் குறுக்குத்தெரு ,வவுனியா) அவர்களினால் 3000 ரூபாய் பணமும் வழங்கி வைக்கப்பட்டன .

இவர்களுக்கான பொருட்களை வவுனியா பசங்க அமைப்பின் தலைவர் பாஸ்கரன் கதீஷன் , செயலாளர் பாக்கியநாதன் லம்போதரன் , அக்கிராம சமுர்த்தி உத்தியோகத்தர் ரஜீவன் அவர்கள் குறித்த சிறுமிக்கு வழங்கி வைத்தனர்.

 

 

You might also like