வவுனியாவில் பெண்கள் வாழ்வில் வளமூட்டும் நிகழ்ச்சித் திட்டம் ஆரம்பித்து வைப்பு

வவுனியாவில் பெண்கள் வாழ்வில் வளமூட்டும் நிகழ்ச்சித் திட்டம் ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு இன்று (12.11.2017) மாலை 4.30 மணியளவில்  சாளம்மைக்குளம்  பொதுநோக்கு மண்டபத்தில்  கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் அல்-ஹாஜ் றிஷாட் பதியுதீன் அவர்களின் தலமையில்  இடம்பெற்றது.

இச் செயற்றிட்டத்தினை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் வடமாகாண சபை உறுப்பினர் ஜெயதிலக , பிரதேச சபை உறுப்பினர், கிராம சேவையாளர் , பொதுமக்கள், பயனாளிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

இலங்கை புடைவை மற்றும் ஆடை நிறுவகத்தினால் ( கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சு ) ஒதுக்கப்பட்ட 20மில்லியன் நிதியில் இச் செயற்றிட்டம் முன்னேடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

You might also like