வவுனியாவில் திருட்டுச்சம்பவத்துடன் தொடர்புடைய மாணவர் கைது : இரு மாணவர்கள் மீது வலைவீச்சு

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு முன்பாக அமைந்து பலசரக்கு பொருட்கள் விற்பனை நிலையத்தில் இன்று (12.11.2017) மதியம் 1.00மணியளவில் திருட்டுச்சம்பவத்துடன் தொடர்புடைய ஒரு மாணவன் பொதுமக்களால் மடக்கி பிடிக்கப்பட்டதுடன் இரு மாணவர்கள் தப்பி ஓடியுள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு அருகே அமைந்துள்ள பலசரக்கு பொருட்கள் விற்பனை நிலையத்திற்கு சென்ற மூன்று பாடசாலை மாணவர்கள் ( வவுனியா கண்டி வீதியில் அமைந்துள்ள பிரபல ஆண்கள் பாடசாலை ) குறித்த வர்த்தக நிலைய உரிமையாளரிடம் ( முதியவர்) தொலைவிலுள்ள பொருளை காட்டி அதனை எடுத்துத்தருமாறு கேட்டுள்ளனர்.

அதனை வர்த்தக நிலைய உரிமையாளர் எடுத்துவர சென்ற சமயத்தில் மற்றை மாணவனோருவன் வர்த்தக நிலையத்திலிருந்த நூடில்ஸ் பொதியினை எடுத்துச் செல்ல முயற்சித்துள்ளார்.

இதனை அவதானித்த பொதுமக்கள் குறித்த மாணவர்களை மடக்கி பிடித்த சமயத்தில் இரு மாணவர்கள் தப்பித்து ஒடியுள்ளனர்.

உடனடியான வவுனியா பொலிஸாருக்கு தகவல் வழங்கியதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டதுடன் குறித்த மாணவனை விசாரணைக்காக பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

You might also like