மாவீரர் நாள் நினைவேந்தலுக்கு தயாராகும் கிளிநொச்சி

எதிர்வரும் 27ஆம் திகதி நடைபெற இருக்கின்ற மாவீரர் நாள் நினைவேந்தலுக்காக தாயகத்திலும் புலம்பெயர் தேசங்களிலும் பல ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், கிளிநொச்சியில் உள்ள மூன்று துயிலுமில்லங்களிலும் நினைவேந்தலுக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் மக்கள், பொது அமைப்புக்கள் பல்கலைக்கழக மாணவர்கள் , அரசியற் கட்சிகள் எனப் பலரும் இணைந்து தற்போது சிரமதானப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த காலத்தில் பல அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் நினைவேந்தல் நிகழ்வுகள் ஏற்பாடாகியிருந்த நிலையில் இம்முறை எவ்வித அச்சுறுத்தல்களும் இன்றி நினைவேந்தல் நிகழ்வுகள் ஏற்பாட்டு செய்யப்பட்டு வருகின்றமை மக்கள் மத்தியில் மகிழ்ச்சி நிலையைத் தோற்றுவித்துள்ளது.

You might also like