கிளிநொச்சி இரணைமடுக்குளத்தின் நீர் மட்டம் உயர்வடைந்துள்ளது

கிளிநொச்சி இரணைமடுக்குளத்தின் நீர் மட்டம் 18.5 அடியாக உயர்வடைந்துள்ளதாக நீர்ப்பாசன திணைக்களத்தின் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்தின் பாரிய நீர்ப்பாசனக்குளமான இரணைமடுக் குளத்தினுடைய புனரமைப்புப்பணிகள் நிறைவடைந்து வருகின்றது.

இந்த நிலையில் கடந்த காலங்களில் நிலவிய கடுமையான வறட்சி காரணமாக 36அடி நீர் கொள்ளளவைக் கொண்ட இரணைமடுக் குளத்தின் நீர்மட்டம் கடந்த மாதம் இறுதி வரை 7அடியாகவே காணப்பட்டது.

 

கடந்த பத்து நாட்களாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக குளத்தினுடைய நீர்மட்டம் வேகமாக உயர்வடைந்துள்ளது.

தற்போது குளத்தினுடைய நீர்மட்டம் 18 அடி 5 அங்குலமாக உயர்வடைந்துள்ளது என்றும் காலபோகச் செய்கையில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு தேவையான நீரை வழங்கக் கூடியதாக இருக்கும் என்றும் இரணைமடு நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

You might also like