வவுனியாவில் ‘ மகிழ்வோர் மன்றம் ‘ மாவட்ட முதியோர் தின விழா – 2017

வவுனியா மாவட்ட சமூக சேவை அலுவலகமும் மாவட்ட முதியோர் சங்கமும் இணைந்து வழங்கும் ‘மகிழ்வோர் மன்றம்’ மாவட்ட முதியோர் தின விழாவின் ஆரம்ப நிகழ்வு இன்று (14.11.2017) காலை 7.30மணியளவில் வவுனியா மத்திய பேரூந்து நிலையத்தில் மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர் எஸ்.ஸ்ரீனிவாசன் தலமையில் இடம்பெற்றது.

இதன் போது பேரூந்துகளில் முதியோர்களுக்கான ஆசனங்களை ஸ்ரிக்கர் ஒட்டி ஒதுக்கும் நிகழ்வு இடம்பெற்றதுடன் முதியோரின் உரிமைகள், அவர்களுக்கான கௌரவம், சமூக மதிப்பு என்பவற்றை வென்றெடுப்பதற்கான விழிப்புணர்வு ஊர்வலம் பேரூந்து நிலையத்தில் ஆரம்பித்து மணிக்கூட்டு சந்தியுடாக வந்து நகரசபை வீதியுடாக நகரசபை கலாச்சார மண்டபத்தை வந்தடைந்தது.

இந்நிகழ்வில் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் எம். பி. ரோஹன புஸ்பகுமார, வவுனியா வடக்கு, செட்டிக்குள  பிரதேச செயலாளர் க.பரந்தாமன் , வெங்கள செட்டிக்குளம் பிரதேச செயலாளர் கே.சிவகரன், தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் சந்திரகுமார் கண்ணன், மாவட்ட கலாச்சார உத்தியோகத்தர், மாகாண விவசாயப் பணிப்பாளர்,  அரச திணைக்கள அதிகாரிகள், உத்தியோகத்தர்கள், வவுனியா தேசிய கல்வியற் கல்லூரி மாணவர்கள், வவுனியா தொழிநூட்பக்கல்லூரி மாணவர்கள், வவுனியா விவசாயக்கல்லூரி மாணவர்கள் , வவுனியா இலங்கை உயர் தொழிநூட்பக்கல்லூரி மாணவர்கள், வவுனியா தேசிய பயிலுனர் கைத்தொழில் பயிற்சி அதிகார சபை மாணவர்கள், வவுனியா பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்கள், இளைஞர்கள் , முதியவர்கள், சமூக ஆர்வளர்கள், சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இரண்டாவது நிகழ்வுகள் காலை 9.30மணியளவில் வவுனியா நகரசபை கலச்சார மண்டபத்தில் நடைபெறவுள்ளன.

 

You might also like