கிளிநொச்சி மாவட்ட செயலகத்திற்கு ஜனாதிபதியால் மூன்று விருதுகள் வழங்கி கொளரவிப்பு

கிளிநொச்சி மாவட்ட செயலகத்தின் நிதி முகாமைத்துவம் மற்றும் கணக்காய்வு என்பவற்றின் சிறந்த செயற்பாடுகளுக்காக ஜனாதிபதியினால் விருது வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் வைத்து மூன்று விருதுகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் வழங்கப்பட்டுள்ளது.

யுத்தத்தின் பின்னரான மீள்குடியமர்வு மற்றும் மக்களுக்கான உட்கட்டமைப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து வரும் கிளிநொச்சி மாவட்ட செயலகமானது, சிறந்த முறையில் சேவையாற்றி வருவதுடன், கடந்த 2015ஆம் ஆண்டில் தேசிய உற்பத்தித்திறன் விருதினைப் பெற்றுக்கொண்டது.

இதேவேளை, அண்மையில் நடைபெற்ற சமுகப்பாதுகாப்பு நிதியத்தின் அதிகளவானவர்களை இணைத்துக் கொண்டமைக்கான சமூக பாதுகாப்பு நிதியத்தின் விருதும் ஜனாதிபதியினால் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மூன்று விருதுகள் ஜனாதிபதியால் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like