வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அமைதிப்பேரணி

காணாமல் ஆக்கப்பட்ட பிள்ளைகள், கணவன்மார்களை மீட்பதற்கு  ஜ.நா வில் குரல் கொடுக்கும் சர்வதேச நாடுகளுக்கு நன்றி தெரிவித்தும் , அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரியும்  இன்று (14.11.2017) மதியம் 12.30மணியளவில்  வவுனியா மத்திய அஞ்சல் அலுவலகத்திற்கு அருகே  264வது நாளாக சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அமைதிப்பேரணியில் ஈடுபட்டனர்.

வவுனியா கந்தசுவாமி ஆலயத்தில் பூஜை வழிபாடுகளை மேற்கொண்ட பின்னர் ஆலயத்திலிருந்து ஆரம்பமாகிய அமைதிப்பேரணி பஜார் வீதியுடாக ஹொரவப்பொத்தானை வீதியினை வந்தடைந்து ஹொரவப்பொத்தானை வீதியுடாக கண்டி வீதியினை வந்தடைந்து ஏ9 வீதியுடாக சுழற்சி முறையிலான உணவுதவிர்ப்பு ஈடுபடும் இடத்தினை வந்தடைந்தனர்.

You might also like