கொடுத்த வாக்கை நிறைவேற்றிய ஜனாதிபதி! கொழும்பு வரும் கிளிநொச்சி மக்கள்

கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளை சந்திப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளார்.

கடந்த மாதம் கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதியிடம், தனியாக சந்திப்பதற்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இதன்போது அதற்கான திகதியை ஒதுக்கித்தருவதாக கூறிய ஜனாதிபதி அந்த வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளார்.

அதன் பிரகாரம் நாளை நண்பகல் ஜனாதிபதியுடனான சந்திப்பினை ஜனாதிபதி செயலகம் ஏற்பாடு செய்துள்ளது.

குறித்த சந்திப்பிற்கு 8 மாவட்டங்களையும் சேர்ந்த பிரிதிநிதிகளாக 31 பேர் நாளை கொழும்புக்கு செல்லவுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்க செயலாளர் தெரிவித்துள்ளார்.

இதற்காக தாம் நாளை செல்லவுள்ளதாகவும், குறித்த சந்திப்பிற்கு ஏற்பாடு செய்திருந்த ஜனாதிபதியின் செயற்பாடானது வரவேற்கத்தக்கது எனவும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கம் தெரிவித்துள்ளது.

தம்மை அழைத்த ஜனாதிபதி நல்லதொரு பதிலை தருவார் என்று எதிர்பார்த்துள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

You might also like