பத்து வயதுச் சிறுமியின் உயிரை பலிவாங்கிய கைபேசி!

பத்து வயதுச் சிறுமியின் உயிரை கைபேசி விவகாரம் ஒன்று பலிவாங்கிய சம்பவம் பலாங்கொடையில் இடம்பெற்றுள்ளதுசௌம்யா என்ற அந்தச் சிறுமி பலாங்கொடையில் உள்ள எல்லபொல, ரந்தோல பகுதியைச் சேர்ந்தவர்.

அவரது தந்தை பிரச்சினை காரணமாக சில காலங்களுக்கு முன் குடும்பத்தை விட்டுப் பிரிந்து சென்றுவிட்டார். சௌம்யாவும் அவரது தாயும் மட்டுமே அந்த வீட்டில் வசித்து வந்தனர்.

சம்பவம் இடம்பெற்றபோது சௌம்யா வீட்டில் தனித்தே இருந்திருக்கிறார்.

ஆரம்ப விசாரணைகளில், கைபேசி ஒன்று சம்பந்தமான விவகாரத்தில் மனமுடைந்த நிலையிலேயே சௌமியா தற்கொலை செய்துகொண்டதாகத் தெரியவந்துள்ளது

You might also like