பொது மக்­க­ளுக்கு எச்­ச­ரிக்கை.!

வங்­கி­களில் ஏ.ரி.எம் (பணம் பெறும்) அட்டைகள் மூலம் பணம் பெறு­வ­தற்­காக வங்­கி­க­ளுக்கு வரும் வாடிக்­கை­யா­ளர்­களை ஏமாற்றி பணம் பறிக்கும் கும்­பல்கள் நட­மா­டு­வ­தாக கல­வான பகுதி வங்கி நிர்­வா­கங்கள் பொது மக்­க­ளுக்கு எச்­ச­ரிக்கை விடுத்­துள்ளன.

தாம் ஏமாற்­றப்­பட்­ட­தாக வாடிக்­கை­யா­ளர்கள் வங்கி முகா­மை­யா­ளர்­க­ளுக்கு வழங்­கி­யுள்ள முறைப்­பா­டு­க­ளை­ய­டுத்தே வங்கி நிர்­வா­கங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன.

வங்­கி­க­ளிலே பணம் பெறும் அட்­டை­களை செயற்­ப­டுத்த தெரி­யா­த­வர்­க­ளி­டமே இந்த ஏமாற்றுக் கும்பல் தமது கைவ­ரி­சையை காட்­டு­வ­தா­கவும் பணத்தை பெற உதவி செய்­வ­துடன் வாடிக்­கை­யா­ளரின் இர­க­சிய எண்ணை அறிந்து கொண்டு வாடிக்­கை­யா­ளரின் அட்­டைக்கு பதி­லாக வேறொரு அட்­டையை வழங்­கு­வ­தா­கவும் வாடிக்­கை­யாளர் வங்கி வளவை விட்டுச் சென்­றதும் அசல் அட்­டை­யையும் இர­க­சிய எண்ணையும் பயன்­ப­டுத்தி அக்­க­ணக்­கு­க­ளி­லுள்ள பணத்தை மோசடி செய்­வ­தா­கவும் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

எனவே எந்தச் சந்­தர்ப்­பத்­தி­லேனும் எவ­ருக்கும் தமது பணம் பெறும் அட்­டை­யையோ இர­க­சிய அட்­டை­யையோ வழங்க வேண்­டா­மெ­னவும் இந்த மோச­டிக்­கா­ரர்­க­ளிடம் பெரும் தொகை பணத்தை பறிகொடுத்த வாடிக்கையாளர்கள் தம்மி டம் முறைப்பாடு செய்துள்ளதாகவும் வங்கி முகாமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

You might also like