வவுனியா கள்ளிக்குளம் கிராமசேவையாளர் பிரிவில் கிராம சக்தி மக்கள் செயற்திட்டம் ஆரம்பித்து வைப்பு

கிராம சக்தி மக்கள் மரம் நாட்டும் செயற்திட்டம் இன்று (15.11.2017) காலை 10மணியளவில் கள்ளிக்குளம் கிராம சேவையாளர் பிரிவிலுள்ள சிதம்பரம் கிராமத்தில் அப்பகுதி கிராம சங்கத் தலைவர் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வவுனியா பிரதேச செயலாளர் கா. உதயராசா, சிறப்பு விருந்தினராக மாவட்ட செயலக திட்டப்பணிப்பாளர்  கிருபாசுதன், உதவி திட்டப்பணிப்பாளர், பிரதேச மாவட்ட செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கள்ளிக்குளம் கிராம சேவையாளர்  கி. கஜந்தன், கள்ளிக்குளம் கிராமசேவையாளர் பிரிவிலுளள்ள 7கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

இவ் வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வில் மாவட்ட திட்டப்பணிப்பாளரினால் மாமரக்கன்றும் நாட்டி வைக்கப்பட்டது.

இதையடுத்து நிகழ்வில் கலந்துகொண்ட அதிதிகளும் மரக்கன்றுகளை நாட்டி வைத்ததையடுத்து நிகழ்வில் கலந்துகொண்ட கிராம மக்களுக்கு பயன் தரும் நல்லின மாமரக்கன்றுகள் 200பேருக்கு வழங்கி வைக்கப்பட்டது.

You might also like