சற்று முன் வவுனியா ஏ9 வீதியில் வாகன விபத்து : மாணவனோருவன் வைத்தியசாலையில்

வவுனியா தெற்கு வலயக்கல்வி பணிமணைக்கு முன்பாக இன்று (15.11.2017) மதியம் 2.45மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் மாணவனோருவன் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவ் விபத்து தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

வவுனியா மத்திய மகா வித்தியலாயத்திலிருந்து பாடசாலை மாணவனை ஏற்றிக்கொண்டு வவுனியா நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிலில் மீது வவுனியாவிலிருந்து கண்டி வீதி நோக்கி பயணித்த கார் தெற்கு வலயக்கல்வி அலுவலகத்திற்கு முன்பாக வீதியின் மறுபக்கம் மாற முற்பட்ட சமயத்தில் மோட்டார் சைக்கிலுடன் மோதி விபத்துக்குள்ளானது.

இவ் விபத்தில் மோட்டார் சைக்கிலில் பயணித்த வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலய மாணவனோருவன் காயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like