கிளிநொச்சியில் வெடிப்பு சம்பவம்! ஒருவர் பலி

கிளிநொச்சி – பூநகரி, கிராஞ்சி பகுதியில் வெடிபொருள் ஒன்று வெடித்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

வீட்டிற்குள் நுழைந்த பாம்பு ஒன்றை அடித்து, அதை தீயிட்டு எரிக்கும் போதே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் நேரில் கண்டவர் கருத்து தெரிவிக்கையில்,

நேற்று இரவு அவரது வீட்டிற்குள் பாம்பு ஒன்று சென்றதாகவும், குறித்த பாம்பை அடித்து கொன்று விட்டு தீயிட்டுக் கொண்டிருக்கையில் வெடிச்சத்தம் கேட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

பின்னர் தாம் குறித்த நபரை வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றதாகவும், அதன் பின்னர் அவர் உயிரிழந்ததாகவும் தகவல்கள் தெரிவித்துள்ளார்.

அவரது குடும்பம் மிகவும் வறுமையானது எனவும், பிள்ளைகள் கல்விக்காக கஷ்டப்படுவதாகவும் நேரில் கண்ட நபர் குறிப்பிட்டுள்ளார்.

அவரது குடும்பத்தில் ஒரு பிள்ளை செஞ்சோலை சிறுவர் இல்லத்தில் கல்வி பயில்வதாகவும் அந்த நபர் தெரிவித்துள்ளார்.<

You might also like