வவுனியாவில் வெடிக்காத நிலையில் இரு கைக்குண்டுகள் மீட்பு

வவுனியா, மகாகச்சக்கொடி பகுதியில் தனிநபர் ஒருவருடைய காணியிலிருந்து வெடிக்காத நிலையில் இரு கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.

கைக்குண்டுகள் இரண்டும் நேற்று மாலை 5 மணியளவில் குறித்த காணியை சுத்தம் செய்த போது மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில், இன்று காலை அங்கு சென்ற பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

மேலும், அப்பகுதியில் இன்னும் கைக்குண்டுகள் இருக்கலாம் என்ற சந்தேகத்தில் அப்பகுதியில் தேடுதல் மேற்கொள்வதற்கு வவுனியா மாவட்ட நீதிமன்றில் அனுமதியினைப் பெற்றுள்ளனர்.

அத்துடன் கைப்பற்றப்பட்ட இரு கைக்குண்டுகளையும், செயலிழக்க வைக்கும் நடவடிக்கையினை விசேட அதிரடிப்படை மேற்கொண்டுள்ளதாக மாமடுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

You might also like