வவுனியா நகைக்கடையினுள் நகைகள் திருடிய நபர் மடக்கி பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைப்பு

வவுனியா பஜார் வீதியிலுள்ள நகையகத்தில் இன்று (15.11.2017) இரவு 7.30மணியளவில் நகைகளை திருடிய திருடனை பொதுமக்கள் மடக்கி பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

வவுனியா பஜார் வீதியில் அமைந்துள்ள நகையகமோன்றிக்கு இன்று இரவு 7.30மணியளவில் மோதிரம் வாங்குவதற்கு நபரோருவர் வந்துள்ளார். குறித்த நபருக்கு பல வடிவங்களில் வடிவமைக்கப்பட்ட மோதிரங்கள் காண்பிக்கப்பட்டது.

ஜந்து மோதிரங்களை கையிலேடுத்து பார்வையிட்ட நபர் தீடிரே மோதிரங்களை அபகரித்துக்கொண்டு தப்பிச் சென்று வீதியில் மோட்டார் சைக்கிலில் சென்ற நபரிடம் திருடனனோருவர் நகைகளை திருடி விட்டான் பிடிக்க வேண்டும் என தெரிவித்து அவரின் மோட்டார் சைக்கிலில் ஏறி சென்றுள்ளார்.

குருமன்காட்டு பொலிஸ் காவரனைக்கு அண்மித்த இடத்தில் இவ்விடத்தில் நிறுத்துங்கள் எனது நகையக ஊரிமையாளர் வருவார் என தெரிவித்துள்ளார். இதையடுத்து குருமன்காடு சந்தியில் மோட்டார் சைக்கில் உரிமையாளர் குறித்த நபரை இறக்கி விட்டுவிட்டு குறித்த நபர் மீது சந்தேகம் ஏற்பட்டு திரும்பி பார்த்த சமயத்தில் குறித்த நபர் உடைகளை மாற்றியுள்ளார்.

உடனே மோட்டார் சைக்கில் சென்று அந்த நபரை கட்டிப்பிடித்து கூச்சலிட்ட சமயத்தில் பொதுமக்கள், பொலிஸார் விரைந்து குறித்த நபரிடம் சோதனையிட்டனர்.

இதன் போது அவரிடமிருந்து நான்கு மோதிரங்கள் மீட்கப்பட்டன. உடனடியாக வவுனியா பொலிஸாருக்கு தகவல் வழங்கியதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் குறித்த நபரை கைது செய்து பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

கைது செய்யப்பட்ட நபர் உயிலங்குளத்தினை சேர்ந்த 24வயதுடைய சிவநேசன் என பொலிஸார் தெரிவித்தனர்.

திருடப்பட்ட நகைகளின் பெறுமதி ஒரு லட்சத்தி இருபதாயிரம் (5மோதிரங்கள்- 3பவுன்) என நகையகத்தில் உரிமையாளர் தெரிவித்தார்.

You might also like