வவுனியாவில் வடமாகாண கல்வி அமைச்சருக்காக காத்திருந்த பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள்

வவுனியா பண்டாரிக்குளம் விபுலாநந்தா கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழாவும் ‘விபுலம்’ சஞ்சிகை வெளியிடும் இன்று (16.11.2017) காலை 8.30மணிக்கு பாடசாலையின் பிரதான மண்டபத்தில் பாடசாலையின் அதிபர் சு.அமிர்தலிங்கம் தலமையில் இடம்பெறவிருந்தது.

இந் நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக வடமாகாண கல்வி அமைச்சர் கந்தையா சர்வேஸ்வரன் அழைக்கப்பட்டிருந்தார். அவரின் வருகைக்காக மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், ஊடகவியலாளர்கள் என அனைவரும் சுமார் 1மணிநேரமாக காத்திருந்தனர்.

வடமாகாண கல்வி அமைச்சர் 9.30மணியளவிலேயே பாடசாலைக்கு சமூகமளித்திருந்தார்.

You might also like