நாட்டின் கரையோரப் பகுதிகளில் சுனாமி ஏற்படப்போவதாக பரப்பப்பட்ட வதந்தி காரணமாக மட்டக்களப்பில் மட்டுமன்றி முல்லைத்தீவிலும் மக்கள் தமது இடங்களை விட்டு பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்ததாகத் தெரியவருகிறது.

நாட்டின் கரையோரப் பகுதிகளில் சுனாமி ஏற்படப்போவதாக பரப்பப்பட்ட வதந்தி காரணமாக மட்டக்களப்பில் மட்டுமன்றி முல்லைத்தீவிலும் மக்கள் தமது இடங்களை விட்டு பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்ததாகத் தெரியவருகிறது.மட்டக்களப்பு மாவட்டத்தில் சுனாமி ஏற்படப் போவதாக இன்று காலை திடீரென வதந்தியொன்று நாடு முழுவதும் பரவியது. இதையடுத்து மட்டக்களப்பின் கரையோரப் பகுதிகளில் உள்ள மக்கள் பீதியடைந்து வீடுகளிலிருந்து வெளியேறினர்.தற்போது கிடைத்த செய்திகளின்படி, மட்டக்களப்பில் மட்டுமன்றி முல்லைத்தீவு மாவட்டத்தின் கரையோரப் பகுதிகளைச் சேர்ந்த மக்களும் வதந்தியால் இடம்பெயர்ந்ததாகத் தெரியவருகிறது.
முல்லைத்தீவு நகரம், அளம்பில், செம்மலை, கொக்கிளாய், முள்ளிவாய்க்கால், புதுமாத்தளன் உள்ளிட்ட கரையோரப் பகுதிகளைச் சேர்ந்த மக்களே இவ்வாறு இடம்பெயர்ந்துள்ளனர். பொலிஸார் சுனாமி வதந்தி குறித்துத் தெளிவுபடுத்த முற்பட்டபோதும், மக்கள் தங்கள் இருப்பிடங்களை விட்டு வெளியேறியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இடம்பெயர்ந்தவர்கள் பாடசாலைகளுக்கு சென்ற தமது பிள்ளைகளையும் பாடசாலையிலிருந்து அழைத்துச் சென்றதால் முல்லைத்தீவு மகா வித்தியாலயம் உள்ளிட்ட கரையோரப் பாடசாலைகளும் இடையில் மூடப்பட்டன.

You might also like