கிளிநொச்சி – இரணைதீவு காணிகளை அடையாளப்படுத்தி, அளவீடு செய்யும் நடவடிக்கைகள்

கிளிநொச்சி – இரணைதீவில் உள்ள காணிகளை அடையாளப்படுத்தி, அளவீடு செய்யும் நடவடிக்கைகள் எதிர்வரும் 25ஆம் திகதி நிறைவடையும் என பூநகரிப் பிரதேச செயலாளர் எஸ்.கிருஸ்ணேந்திரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் பூநகரி பிரதேச செயலாளரிடம் தொடர்பு கொண்டு கேட்ட போது இவ்வாறு கூறியுள்ளார்.

தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

குறித்த மாவட்டத்தின் அதிக கடல் வளம் கொண்ட இரணைதீவு இதுவரை விடுவிக்கப்படாது கடற்படையினரின் கட்டுப்பாட்டில் இருந்து வருவதனால் இங்கே வாழ்ந்த குடும்பங்கள் இதுவரை மீள்குடியேற அனுமதிக்கப்படாத நிலையில் முழங்காவில் இரணைமாநகர் பகுதியில் வாழ்ந்து வருகின்றனர்.

இந்த நிலையில் தமது பூர்வீக நிலத்தை விடுவிக்கக்கோரி கடந்த 2010ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்த வந்த மக்கள் கடந்த மே மாதம் 1ஆம் திகதி கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் ஏழு மாதங்களாக இன்றும் தொடர் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

ஏற்கனவே கடற்படையினர் இணைக்கிக் கொண்டதற்கமைவாக பொதுமக்களின் காணிகளை அடையாளப்படுத்தி, அளவீடு செய்யும் நடவடிக்கைகள் கடந்த மாதம் முதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

நியமிக்கப்பட்ட நில அளவைத் திணைக்கள அதிகாரிகள் குழு அங்கு சென்று காணிகளை அடையாளப்பத்தி, அளவீடு செய்யும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

எதிர்வரும் வரும் 25ஆம் திகதியளவில் அதனுடைய பணிகள் நிறைவடையும். இந்தப் பணிகள் நிறைவுபெற்றதன் பின்னர் இரணைதீவுக்கு கள விஜயம் ஒன்றினை மேற்கொண்டு குறித்த பகுதிகளை விடுவிக்குமாறு பாதுகாப்பு அமைச்சுக்கு கடிதத்தினை அனுப்பவிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

You might also like