இரு தினங்களில் 6 வாள்­வெட்டு சம்­ப­வங்கள்

யாழ் – கோப்பாய் மற்றும் மானிப்பாய் பொலிஸ் எல்­லைக்­குட்­பட்ட பகு­தி­களில் கடந்த இரு நாட்­க­ளுக்குள் 6 வாள் வெட்டு சம்­ப­வங்கள் பதி­வா­கி­யுள்ள நிலையில் அவை கார­ண­மாக 12 பேர் காய­ம­டைந்­துள்­ளனர்.இதனால் மீளவும் யாழ்.மாவட்­டத்தில் வாள் வெட்டுக்கும்­பல்­களின் அட்­டகாசம் தலை தூக்­கு­கி­றதா என்ற கேள்வி எழுந்­துள்­ள­துடன் பொது மக்கள் பெரும் அச்­சத்­துக்கு உள்­ளா­கி­யுள்­ளனர்.இந் நிலை­மையை உட­ன­டி­யாக கட்­டுப்­பாட்­டுக்குள் கொண்டு வர பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜய­சுந்­தர வடக்கு சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதி­ப­ருக்கு நேற்று உத்­த­ர­விட்­டுள்ளார். அவ­சி­ய­மான அதி­கா­ரத்தை பயன்­ப­டுத்தி நிலை­மையை கட்­டுப்­பாட்­டுக்குள் கொண்டு வந்து சந்­தேக நபர்­களைக் கைது செய்­யு­மாறு பொலிஸ் மா அதிபர், சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரொஷான் பெர்­ணான்­டோ­வுக்கு உத்­த­ர­விட்­டுள்ளார்.

நேற்று முன் தினம் 14 ஆம் திகதி இரவு வேளையில் இடம்­பெற்ற வாள் வெட்டு சம்­ப­வங்­களில் 8 பேர் காய­ம­டைந்­துள்­ளனர். மானிப்பாய் – சங்­கு­வேலி வடக்கு பகு­தியில் முச்­சக்­கர வண்டி சாரதி ஒரு­வரை வெட்­டு­வ­தற்­காக வாள் வெட்டுக் குழு­வினர் துரத்­தி­யுள்­ளனர். இதன்­போது அவர்­க­ளிடம் இருந்து தப்­பிக்க வீடொன்­றுக்குள் அந்த முச்­சக்­கர வண்டி சாரதி நுழைந்­துள்ள நிலையில், அவ்­வீட்டில் இருந்த, நேற்று வெளி நாடு செல்ல தயா­ராக இருந்த நபர்கள் மூவரை வாள் வெட்டுக் குழு­வினர் வெட்­டி­யுள்­ளனர். அதன் பின்னர் யாழ் செல்லும் வீதியில் நின்­றி­ருந்த நபர் ஒரு­வ­ரையும், கோப்பாய் முக­மடம் பகு­தியில் வைத்து இரு­வ­ரையும் கோண்­டாவில் பஸ் நிலையம் அருகில் வைத்து மற்­றொ­ரு­வ­ரையும் வாள் வெட்­டுக்கு உள்­ளா­கி­யுள்­ளனர். அதற்கு முன்னர் 13 ஆம் திகதி இரு சம்­ப­வங்­களில் நால்வர் வெட்­டுக்­கா­யங்­க­ளுக்கு உள்­ளா­கி­யுள்­ளனர்.

இவர்கள் அனை­வரும் யாழ். போதனா வைத்­தி­ய­சா­லையில் சிகிச்சைப் பெறும் நிலையில் விஷேட பொலிஸ் விசா­ர­ணைகள் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளன. வடக்கு பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரொஷான் பெர்­ணான்டோ, யாழ். பிரதிப் பொலிஸ் மா அதிபர் பாலித பெர்­ணான்டோ, சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சர் விஜித்த குண­ரத்ன ஆகி­யோரின் மேற்­பார்­வையில் இந்த விசா­ர­ணைகள் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளன.
முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்ள ஆரம்­ப­கட்ட விசா­ர­ணை­களில், இந்த வாள் வெட்­டுக்­க­ளுடன் 10 பேர் கொன்ட குழு­வொன்று தொடர்­பு­பட்­டுள்­ள­தாக தெரி­ய­வந்­துள்ள நிலையில், அவர்கள் 5 மோட்டார் சைக்­கிள்­களைப் பயன்படுத்தியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. அதன்படி இந்த வாள் வெட்டு சம்பவங்கள் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையதா என ஆராயும் பொலிஸார் சந்தேக நபர்களை தேடி பல் முணை விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

You might also like