தமிழக மீனவர்கள் பத்து பேர் கைது

தமிழகத்தின் நாகப்பட்டினத்தில் இருந்து படகு எண் 885இல் மீன்பிடிக்கச் சென்ற நாகை மீனவர்கள் பத்துப் பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். அவர்கள் பயணித்த விசைப்படகு ஒன்றையும் கடற்படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.மேற்படி மீனவர்கள் நெடுந்தீவுக்கு வடகிழக்கே மீன்பிடித்துக் கொண்டிருக்கும்போதே கைது செய்யப்பட்டனர்.இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்ததாகவும் தடைசெய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடித்ததாகவும் மீனவர்கள் மீது கடற்படையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.கைது செய்யப்பட்ட மீனவர்கள் தற்போது காங்கேசன்துறை கடற்படை முகாமில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.

You might also like