கிளிநொச்சி வெடிப்புச் சம்பவத்தில் ஒருவர் பலி

கிளிநொச்சியில் இடம்பெற்ற குண்டுவெடிப்பொன்றில் ஒருவர் கொல்லப்பட்டார். கிளிநொச்சி, பூநகரி, கிராஞ்சி பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றது.நாகப்பாம்பு ஒன்றை அடித்துக்கொன்ற நபர் ஒருவர், வீட்டுக்கு அருகாமையில் இருந்த குப்பை குவியலில் அதை எரிக்க முற்பட்டார். இதன்போது, பெருஞ்சத்தத்துடன் வெடிப்பு ஒன்று நிகழ்ந்ததாக சம்பவத்தை நேரில் கண்டவர்கள் கூறினர்.உடனடியாக அவர் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டபோதும் பரிதாபகரமாக உயிரிழந்தார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த ஒரு குழந்தையின் தந்தையாவார்.சம்பவம் பற்றி ஆய்வு நடத்திய பொலிஸார், யுத்த காலத்தின்போது புதைத்து வைத்த கண்ணிவெடி அல்லது வெடிக்கும் நிலையில் இருந்த வெடி மருந்து, தீ மூட்டியதால் வெடித்திருக்கலாம் எனத் தெரிவித்தனர்.

You might also like