ஹட்டன் செனன் தோட்ட குடியிருப்பில் திடீர் தீ : 19 பேர் பாதிப்பு.!

ஹட்டன் செனன் தோட்ட தோட்டத்தில் குடியிருப்பில் ஏற்பட்ட திடீர் தீயினால் 3 வீடுகள் சேதமாகியுள்ளதுடன் அதில் வாழ்ந்த 5 குடும்பங்களை சேர்ந்த 19 பேர் பாதிப்புக்குள்ளாகியுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.மேற்படி தீ விபத்து ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செனன் கே.ஜி குரங்கு மலை பிரிவில் இன்று காவை 10.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

தீயினை பொது மக்கள், ஹட்டன் டிக்கோய நகர சபையின் தீயினைக்கும் பிரிவு ஆகியன இணைந்து தீயினை கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளனர்.
இத்தீவிபத்தில் எவ்வித உயிர் ஆபத்தோ, காயங்களோ ஏற்படாத போதிலும் உடமைகளுக்கு தேதம் ஏற்பட்டுள்ளன.

இத் தீ விபத்து காரணமாக பலரது அத்தியவசிய ஆவணங்கள் உடுதுனிகள், தளபாடங்கள் போன்றன சேதத்திற்கு உள்ளாகியுள்ளன.
இத் தீ விபத்து மின்சார ஒழுக்கு காரணமாக ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் தெரிவிப்பதுடன் இது தொடர்பான விசாரணைகளையும் சேதவிபரங்கள் தொடர்பாகவும் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பாதிக்கப்பட்டவர்கள் உறவினர் மற்றும் அயலவர்களின் வீடுகளில் தங்க வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.

You might also like