காதலரை அடித்துத் துரத்திவிட்டு காதலி மீது கூட்டு வன்புணர்வு; ஐந்து இளைஞர்கள் கைது

இளம் காதலரைத் தாக்கிவிட்டு காதலியைக் கூட்டுப் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கிய ஐந்து இளைஞர்களை மகியங்கனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.பதினேழு வயதான இளம் பெண், வார இறுதி வகுப்புகளுக்குச் செல்வதாகக் கூறி தனது 20 வயது காதலனுடன் மகியங்கனை தியபானா குளத்தையொட்டியுள்ள வனப் பகுதிக்குள் உல்லாசமாக இருந்துள்ளார்.அப்போது அங்கு வந்த இளைஞர்கள் கூட்டம் ஒன்று அவர்களைப் பயமுறுத்தியது. பின்னர் காதலனைக் கண்மண் தெரியாமல் தாக்கித் துரத்திவிட்டு, காதலியைக் காட்டுக்குள் இழுத்துச் சென்று கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ளனர்.

வீடு திரும்பிய இளம் பெண், நடந்த சம்பவத்தை தன் பெற்றோரிடம் கூறியுள்ளார். பெற்றோர் அவரை உடனடியாக சிகிச்சைகளுக்காக மகியங்கனை மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் பொலிஸில் இதுபற்றி முறைப்பாடு அளித்தனர்.முறைப்பாடளித்த பன்னிரண்டு மணி நேரத்தினுள் சந்தேக நபர்களான ஐந்து பேரையும் பொலிஸார் கைது செய்தனர். சந்தேக நபர்கள் பதினேழு முதல் 25 வயதுக்கு உட்பட்டவர்கள் என்றும் 49 கணுவ (49வது தூண்) பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.கைதான ஐவரும் மாவட்ட நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

You might also like