“இந்தியாவில் உள்ள அகதிகளை அழைத்துவர பொறிமுறை வேண்டும் “

இந்­தி­யாவில் உள்ள இலங்கை அக­தி­களை மீண்டும் நாட்­டுக்கு அழைத்­து­வந்து அவர்­களின் சொந்த நிலங்­களில் குடி­யேற்­று­வ­தற்கு உரிய பொறி­மு­றை­யொன்று அமுல்­ப­டுத்­தப்­பட வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் வன்னி மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சார்ஸ் நிர்­ம­ல­நாதன் கோரிக்கை விடுத்தார். பாரா­ளு­மன்­றத்தில் புதன்­கி­ழமை நடை­பெற்ற 2018ஆம் ஆண்­டுக்­கான வரவு – செல­வுத்­திட்­டத்தின் மீதான ஐந்தாம் நாள் விவா­தத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

அவர் மேலும் உரை­யாற்­று­கையில்,

2018 ஆம் ஆண்­டுக்­கான வரவு – செல­வுத்­திட்டம் நீலப்­ப­சுமை வரவு செல­வுத்­திட்டம் என பெய­ரி­டப்­பட்­டுள்­ளது. நீலம் என்­பது கடலைக் குறிப்­ப­தா­கவும், பசுமை என்­பது விவ­சா­யத்­தினை குறிப்­ப­தா­கவும் இருக்­கின்­றது. இந்த இரண்டு விட­யங்­களை பிர­தா­ன­மாகக் கொண்­டதுதான் வட­மா­காணம்.கடல்சார் விட­யங்­களை பார்க்­கையில் தற்­போதும் இந்­திய மீன­வர்கள் இழு­வைப்­ப­ட­கு­களில் அத்துமீறி நுழை­வ­தனால் எமது மீன­வர்கள் பெரும்­பா­திப்­புக்­குள்­ளாகி வரு­கின்­றார்கள். இது தொடர்­பாக உரிய நடவ­டிக்­கை­களை அர­சாங்கம் எடுக்க வேண்டும். குறிப்­பாக இந்­திய மீன­வர்­களின் வரு­கையை முழு­மை­யாக தடுக்கும் வகை­யி­லான நட­வ­டிக்­கைகள் அவ­சி­ய­மா­கின்­றன. அதே­நேரம் தென்­னி­லங்கை மீன­வர்­களும் வடக்கு கடற்­ப­ரப்பில் அத்­து­மீ­றல்­களில் ஈடு­ப­டு­கின்­றார்கள். இதற்கு கடற்­ப­டை­யி­னரும் முழு­மை­யான ஒத்­து­ழைப்­புக்­களை வழங்­கு­கின்­றார்கள். இந்த நிலை­மை­யா­னது முழு­மை­யாக மாற்­றப்­ப­ட ­வேண்டும். கடற்­ப­டை­யினர் அவ்­வா­றான செயற்­பா­டு­க­ளுக்கு துணை­போ­கக்­கூ­டாது. இது குறித்து விட­யத்­திற்கு பொறுப்­பான அமைச்சர் கவ­னத்தில் கொள்ள வேண்டும். அதே­நேரம் கடலில் தரித்து நின்று மீன்­பி­டிப்­ப­தற்­கான பட­குகள் மானிய விலையில் வழங்­கப்­படும் என கடந்த வரவு – செல­வுத்­திட்­டத்­திலும் குறிப்­பி­டப்­பட்­டி­ருந்­தது. ஆனால் தற்­போது வரையில் வடக்கில் எந்­த­வொரு தரப்­பி­ன­ருக்கும் அந்த வாய்ப்பு வழங்­கப்­பட்­டி­ருக்­க­வில்லை. வடக்கில் உள்ள ஐந்து மாவட்­டங்­களில் 4 மாவட்­டங்கள் மீன்­பி­டிக்­கான வளத்­தினைக் கொண்­டி­ருக்­கின்­றன.

அத­ன­டிப்­ப­டையில் மாவட்­டத்­திற்கு ஒன்று என நான்கு மாவட்­டங்­க­ளுக்­கும் தலா ஒவ்­வொரு தரித்து நின்று மீன்­பி­டிக்கும் பட­கு­களை மானிய விலையில் குறிப்­பாக 50சத­வீ­த­மான விலைக்­க­ழி­வுடன் வழங்­கு­வ­தற்கு உரிய நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­பட வேண்டும் எனக் கேட்­டுக்­கொள்­கின்றேன். அடுத்த­தாக பசு­மை­ வி­ட­யத்­தினை எடுத்­துக்­கொண்டால் வடக்கில் இரண்­டு­ போக பயிர்ச்­செய்­கைகள் நடை­பெ­று­வது வழ­மை­யாக இருந்­த­போதும் தற்­போது பெரும்­போக நட­வ­டிக்­கைகள் மட்­டுமே முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றன.
முத­லா­வ­தாக அதற்கு நீர்ப்­பா­சனப் பிரச்­சினை இருக்­கின்­றது. இரண்­டா­வ­தாக மானி­யங்கள் கிடைப்­பதில் காணப்­படும் பார­பட்சம் உள்­ளது. உதா­ர­ண­மாக மன்னார் மாவட்­டத்­தினை எடுத்­துக்­கொண்டால் குளங்கள் எவையும் புனர்­நிர்­மாணம் செய்­யப்­ப­டாத நிலை­மையே காணப்­ப­டு­கின்­றது.

தற்­போது மல்­வத்து ஓயா­ திட்­டத்­தினை முன்­னெ­டுப்­ப­தற்கு முயற்­சிகள் நடை­பெ­று­கின்­றன. அது வெற்­றி­பெ­று­மி­டத்து மன்னார் கட்­டுக்­கரை குளத்­திற்­கான நீரினை பெற­மு­டியும். இதன் உத­வி­யுடன் சிறு­போக செய்­கையை மேற்­கொள்­வ­தற்கு மன்னார் மாவட்ட விவ­சா­யி­க­ளுக்கு வாய்ப்பு ஏற்­படும் என்ற நம்­பிக்கை எமக்­குள்­ளது. இது­போன்று வன்­னி­யிலும் உள்ள சிறு­கு­ளங்­களை புனர்­நிர்­மாணம் செய்ய வேண்­டி­யது மிகவும் முக்­கி­ய­மா­ன­தா­கின்­றது. அதே­நேரம் வட­மா­காண மக்­க­ளுக்கு கல்­ வீ­டுகள் கட்­டப்­ப­ட­வேண்டும் என்ற கோரிக்கை முன்­வைக்­கப்­பட்­டி­ருந்தது. எமதுகோரிக்­கைகள் ஏற்­றுக்­கொள்­ளப்­பட்டு தற்­போது அதற்­கான முன்­மொ­ழி­வாக 50 ஆயி ரம் கல்­ வீ­டு­களை கட்­டு­வ­தற்­கான அனு­மதி அளிக்­கப்­பட்­டுள்­ளது. அந்த செயற்­பா­டுகள் தாம­த­மின்றி முன்­னெ­டுக்­கப்­பட வேண்டும்.

முன்னாள் போரா­ளி­க­ளுக்கு 25 மில்­லியன் ரூபா நிதி ஒதுக்­கீடு செய்­யப்­பட்­ட­மையை வர­வேற்­கின்றோம். அதே­போன்று வித­வைப்­பெண்கள், மாற்­றுத்­தி­ற­னா­ளிகள் ஆகி­யோ­ருக்கும் ஒதுக்­கீ­டுகள் முதற்­த­ட­வை­யாக செய்­யப்­பட்­டுள்­ளன. அவற்றை வர­வேற்­கின்றோம். ஆனால் எம்­ம­வர்­களின் நிலை­மையில் இந்த நிதி அவர்­களின் மறு­வாழ்­வுக்கு போது­மா­ன­தாக இல்லை என்­பதை தங்­களின் கவ­னத்­திற்கு கொண்டு வர விரும்­பு­கின்றேன்.
இதே­வேளை யுத்­தத்தின் கார­ண­மாக இந்த நாட்­டி­லி­ருந்து இடம்பெயர்ந்து இலட்சக்கணக்கான மக்கள் இந்தியாவில் முகாம்களில் வாழ்கின்றார்கள். அவர்களை மீளவும் நாட்டுக்குள் அழைத்து வருவதற் கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக அவர்கள் தமது தாயக பூமி யில் மீளவும் குடி யேறுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான ஜனாதி பதியின் கீழ் இயங் கும் நல்லிணக்க அமைசசு உரிய பொறிமுறை யொன்றை முன்னெடுக்க வேண்டும்.
அவ்வாறான மக்கள் தமது சொந்த நில ங்களுக்கு திரும்புகின்ற போது தான் சமூக நல்லிணக்கம் என்பது உதட்டளவில இல் லாது செயல்முறையில் சாத்தியமாகும் என் றார்.

You might also like