வவுனியா நகரமத்தியில் கேரளா கஞ்சாவுடன் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர் கைது

வவுனியா மத்திய பேரூந்து நிலையத்திற்கு முன்பாக இன்று (17.11.2017)  அதிகாலை 5.15 மணியளவில் 6கிலோ 43கிராம் கேரளா கஞ்சாவுடன் யாழ்ப்பாணத்தை சேர்ந்த நபரோருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வவுனியா போதைப்பொருள் தடுப்பு பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் உப பொலிஸ் பரிசோதகர் அசோக பிரசாந்த அவர்களின் தலமையிலான பொலிஸ் சார்ஸன் குனசேன (56213) , பொலிஸ் கொஸ்தபர்களான கீர்த்தி (41672), கோத்தளவல (66412) , பண்டார (14957) , பிரதிப் (45980) , சாரங்க (60249) , சமரதுங்க (52389) ஆகிய பொலிஸாரினால் வவுனியா மத்திய பேரூந்து நிலையத்திற்கு முன்பாக சந்தேகத்திக்கிடமாக நின்ற சாவக்கச்சேரியைச் சேர்ந்த 37வயதுடைய துரைராசா துசிபன் என்பவரின் பயணப்பொதியினை சோதனையிட்ட சமயத்தில் 6கிலோ 43கிராம் கேரளா கஞ்சாவினை கைப்பற்றியுள்ளனர்.

யாழ்ப்பாணத்திலிருந்து புத்தளம் நோக்கி கஞ்சாவினை கடத்தி செல்ல முற்பட்டுள்ளதாவும் மேலதிக விசாரணைகளின் பின்னர் வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் ஒப்படைக்கவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

You might also like