காணாமல் போனவர்களது குடும்பத்தவர்களுக்கும் ஜனாதிபதக்குமிடையில் சந்திப்பு

காணாமல் போனோரது குடும்ப அங்கத்தவர்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சந்தித்துள்ளார். இந்தச் சந்திப்பு இன்று பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.
இந்தச் சந்திப்பில் காணாமல் போனவர்களது குடும்பத்தவர்கள் தமது பிரச்சினைகளையும், கோரிக்கைகளையும் ஜனாதிபதியிடம் சமர்ப்பித்தார்கள். நாட்டின் எந்த இனப்பிரிவைச் சேர்ந்தவர்களது பிரச்சினைகள் குறித்தும் தமக்கு பரந்த புரிந்துணர்வு இருப்பதாகத் ஜனாதிபதி தெரிவித்தார். மிகவும் நியாயமான விதத்தில் பிரச்சினைகளைத் தீர்க்க திடசங்கற்பம் பூண்டுள்ளதாகவும் ஜனாதிபதி இதன்போது கூறினார்.

அரசாங்கம் தடுப்பு முகாம்களில் சிலரை தடுத்து வைத்துள்ளதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் பற்றி ஜனாதிபதி கருத்து வெளியிட்டார்.அத்தகைய இரகசிய தடுப்புமுகாம்கள் எதுவும் தற்போதைய அரசாங்கத்தின் கீழ் செயற்படவில்லை என்றும் அவ்வாறு எவரும் இரகசியமாகத் தடுத்து வைக்கப்படவில்லை என்றும் தெரிவித்தார்.

காணாமல் போனோரின் உறவினர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கான துரித தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்க தான் எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி அவர்கள் இதன்போது தெரிவித்தார்.
காணாமல் போனவர்களது குடும்ப அங்கத்தவர்களின் முறைப்பாடுகள், கோரிக்கைகள், தகவல்கள் போன்றவற்றை சேகரிப்பதற்கான புதிய விண்ணப்பப்பத்திரங்களை மாவட்ட செயலாளர்கள் ஊடாக கிடைக்கச் செய்யுமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினர்h. அடுத்த மாதம் 15ம் திகதிக்கு முன்னர் தகவல்களை சேகரிக்குமாறு மாவட்ட செயலாளர்களுக்கு சுற்றுநிருபம் அனுப்புமாறும் அவர் கேட்டுக் கொண்டார். இந்தத் தகவல்களை காணாமல் போனோர் அலுவலகமும், காணாமல் போனவர்களுக்கான ஆணைக்குழுவும் மீள்பரிசீலனை செய்ய உள்ளன.

You might also like