வெட்டுக்காயங்களுடன் பெண்ணின் சடலம் மீட்பு.!

நுவரெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நுவரெலியா ஹாவாஎலிய பிரதேசத்தில் வெட்டுக்காயங்களுடன் பெண்ணின் சடலம் ஒன்று இன்று நுவரெலியா பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.ஹாவாஎலிய பகுதியில் அமைந்துள்ள மின்சார சபைக்கு அருகில் உள்ள பகுதியிலிருந்து இந்த பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர்.இவ்வாறு சடலமாக மீட்கப்பட்ட பெண் நுவரெலியா ஹாவாஎலிய கெமுனு மாவத்தை பகுதியை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தாயான பெரியசாமி சியாமலா என அடையாளம் காணப்பட்டுள்ளார்.மீட்கப்பட்ட பெண்ணின் சடலம் தொடர்பில் இப்பகுதியிலுள்ள பிரதேசவாசிகள் நுவரெலியா பொலிஸாருக்கு வழங்கிய தகவலையடுத்து காலை 11 மணியளவில் ஸ்தலத்திற்கு விரைந்த பொலிஸார் இவ்வாறு சடலத்தை மீட்டுள்ளனர்.

சடலம் நுவரெலியா மாவட்ட நீதிபதியின் விசாரணையின் பின் நுவரெலியா வைத்தியசாலைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்படும் என இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வரும் நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர்.அதேவேளை இச்சம்பவம் குறித்து இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை எனவும், சந்தேக நபர்கள் தொடர்பில் தேடுதல் நடவடிக்கையில் ஈடுப்பட்டுள்ளதாகவும் நுவரெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மேலும் தெரிவித்தனர்.

You might also like