வவுனியாவில் தேசிய கொடியை ஏற்ற மறுப்பு தெரிவித்த வடக்கு மாகாண கல்வியமைச்சர் (காணோளி)

வவுனியாவில் உள்ள சிங்கள பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வடமாகாண கல்வியமைச்சர் சர்வேஷ்வரன் தேசிய கொடியை ஏற்றுவதற்கு மறுப்புத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கொழும்பு ஊடம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. குறித்த நிகழ்வில், சிறப்பு அதிதியாக வடமாகாண கல்வியமைச்சர் சர்வேஷ்வரன் கலந்து கொண்டுள்ளார்.

இந்நிலையில், பல தடவைகள் அவரது பெயரை குறிப்பிட்டு அழைத்த போதிலும் அவர் தேசிய கொடியை ஏற்றுவதற்கு மறுப்புத் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், இந்த சம்பவம் தொடர்பில் வடக்கு கல்வி அமைச்சர் தகவல் எதுவும் வெளியிட வில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

You might also like