கிளிநொச்சியில் போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்ற தவறும் சாரதிகள்

வீதி போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்ற தவறும் பெரும்பாலான சாரதிகளினாலேயே பல விபத்துக்கள் இடம்பெற்று வருகின்றன.

இவ்வாறான சாரதிகளின் பொறுப்பற்ற செயற்பாடுகள் காரணமாக விபத்துகளின்போது, அவர்களை நம்பி வாகனங்களில் பயணிக்கின்றவர்களின் உயிர்களும் பலியாகின்ற சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன

அந்த வகையில் இன்று கிளிநொச்சி மாவட்டச் செலயகம் முன்பாக சாரதியின் பொறுப்பற்ற செயற்பாடுகள் காரணமாக பாரிய விபத்து ஒன்று ஏற்பட இருந்த நிலையில், பின்னர் அது தவிர்க்கப்பட்டது.

பகல் ஒரு மணிக்கு கொழும்பிலிருந்து யாழ். நோக்கி பயணிக்கும் புகையிரதம் வருகை தரும் நேரத்தில் புகையிரத கடவை சமிஞ்சை போடப்பட்டிருந்தது.

எனினும், அதனை பொருட்படுத்தாத முச்சக்கர வண்டி சாரதி ஒருவர், புகையிரதக் கடவையை கடக்க முற்பட்டு இடைநடுவில் மாட்டிக்கொண்டார்.

பின்னர் ஒரு வழியாக புகையிரதக் கடவையை விட்டு முச்சக்கர வண்டி கடந்து சென்றது. இதன் போது புகையிரதம், புகையிரத நிலையத்தை அண்மித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

You might also like