சர்வதேச ரீதியிலான போட்டிக்காக சிங்கப்பூர் செல்லும் கிளிநொச்சி மாணவன்

சர்வதேச ரீதியில் நடைபெறும் கணித ஒலிம்பியாட் போட்டியில் பங்குபற்றுவதற்காக கிளிநொச்சியைச் சேர்ந்த தமிழ் மாணவரொருவர் சிங்கப்பூர் செல்லும் வாய்ப்பை பெற்றுள்ளார்.

கிளிநொச்சி மகாவித்தியாலயத்தில் தரம் ஆறில் கல்வி பயிலும் தெய்வேந்திரம் திருக்குமார் என்ற மாணவரே இந்த வாய்ப்பினை பெற்றுக்கொண்டுள்ளார்.

இதேவேளை இலங்கையிலிருந்து சர்வதேச ரீதியல் நடைபெறும் ஒலிம்பியாட் போட்டிக்குத் தெரிவாகியுள்ள 6 மாணவர்களில் இடம்பிடித்துள்ள ஒரேயொரு தமிழ் மாணவன் என்ற பெருமையை அவர் தட்டிக் கொண்டுள்ளார்.

குறித்த போட்டி எதிர்வரும் 20 ஆம் திகதி சிங்கப்பூரில் நடைபெறவுள்ள நிலையில் தனது வெற்றிக்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் தெய்வேந்திரம் திருக்குமார் நன்றிகளைத் தெரிவித்துள்ளார்.

 

 

 

 

You might also like