கிளிநொச்சியில் விதைக்கப்பட்ட வயல் மாயம் – வடிவேல் பாணியில் மக்கள் தெரிவிப்பு

வடி­வே­லு­வின் பாணி­யில் வய­லி­னைக் காண­வில்லை என முறைப்­பாடு செய்ய வேண்­டிய சூழ்­நிலை தோன்­றி­யுள்­ள­தாக பளைப் பிர­தேச விவ­சா­யி­கள் தெரி­விக்­கின்­ற­னர்.

கிளி­நொச்சி மாவட்­டத்­தில் கடந்த ஒரு வாரத்­துக்கு மேலாக தொடர்ச்­சி­யாக மழை பெய்­து­வ­ரும் நிலை­யில் பளைப் பிர­தே­சத்­திற்கு உட்­பட்ட கச்­சார்­வெளி, அர­சர்­கேணி, புலோப்­பளை போன்ற கிரா­மங்­க­ளில் வயல் நிலங்­கள் விதைக்­கப்­பட்டு சில தினங்­க­ளில் வயல் நிலங்­கள் வெள்­ளத்­தி­னால் முழு­மை­யாக மூடப்­பட்­டுள்­ளன.

யாரு­டைய வயல் எங்­கி­ருக்­கின்­றது என்று கூடத் தெரி­யாத அள­வுக்கு முழு­மை­யாக வயல்­கள் நீரி­னால் மூடப்­பட்­டுள்­ளன.

மழை தொட­ரு­மா­னால் பாதிப்­புக்­கள் இன்­ன­மும் அதி­கா­மக காணப்­ப­டும் என விவ­சா­யி­கள் தெரி­விக்­கின்­ற­னர்.

You might also like