கிளிநொச்சியில் காத­லிக்க மறுத்த மாண­வியை வழி­ம­றித்­துத் தாக்­கிய ஆசி­ரி­யர்!!

தன்­னைக் காத­லிக்க மறுத்த மாண­வி­யைத் தாக்­கி­னார் என்ற குற்­றச்­சாட்­டில் ஆசி­ரி­யர் ஒரு­வர் தற்­கா­லி­க­மாக இடை­நி­றுத்­தப்­பட்­டுள்­ளார்.

இந்­தச் சம்­ப­வம் கிளி­நொச்­சி­யில் நடந்­துள்­ளது.
கிளி­நொச்­சி­யில், புற­ந­கர்ப் பகு­தி­யில் உள்ள உயர்­த­ரப் பாட­சா­லை­யில் கற்­கும் ஆசிரி­யர் ஒரு­வர் மாணவி ஒரு­வ­ரி­டம் தனது காத­லைத் தெரி­வித்­தார் என்­றும், மாணவி அதற்கு மறுப்­புத் தெரி­வித்­தார் என்­றும் கூறப்­ப­டு­கின்­றது.

ஆசி­ரி­யர் தனது காத­லைத் தொடர்ந்து தெரி­வித்து வந்­தார் என்­றும் கடந்த வெள்­ளிக்­கி­ழமை மாணவி பாட­சாலை முடிந்து வீடு திரும்­பி­ய­போது அவரை வழி­ம­றித்­துத் தாக்­கி­னார் என்­றும் தெரி­விக்­கப்­பட்­டது.

மாணவி இது தொடர்­பில் பெற்­றோ­ரி­டம் தெரி­வித்­தார். இந்­த­வி­ட­யம் கடந்த திங்­கட்­கி­ழமை வல­யக் கல்­விப் பணி­ம­னை­யின் கவ­னத்­துக்­குக் கொண்டு செல்­லப்­பட்­டது.

“இது தொடர்­பில் விசா­ர­ணை­கள் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளன. இறு­தித் தீர்வு எட்­டும்­வரை அந்த ஆசி­ரி­யர் தற்­கா­லி­கப் பணி நீக்­கம் செய்­யப்­பட்­டுள்­ளார்.”- என்று வல­யக் கல்­விப் பணிப்­பா­ளர் தெரி­வித்­தார்.

இந்த ஆசி­ரி­யர் தொண்­ட­ரா­சி­ரி­ய­ரா­கப் பணி­யாற்றி நிரந்­தர நிய­ம­னம் பெற்­ற­வர் என்று கூறப்­ப­டு­கின்­றது.

You might also like