இந்திய மீனவர்கள் 10 பேர் கைது.!

இலங்கை கடல் எல்லைக்குள் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 10 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.தமிழகம் நாகப்பட்டினம் பகுதியைச்சேர்ந்த 10 தமிழக மீனவர் யாழ் பருத்தித்துறைக்கு வடக்கே 13 கடல்மைல் தொலைவில் மீன்பிடியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த வேளை ரோந்துப்பணிகளில் ஈடுபட்டிருந்த பருத்தித்துறை கடற்படையினரால் நேற்றிரவு கைது செய்யப்பட்டனர்.அத்துடன் அவர்களின் இழுவைப்படகுகளும் மீன்பிடி உபகரணங்களும் கைப்பற்றப்பட்டனகைது செய்யப்பட்ட 10 இந்திய தமிழக மீனவர்களை கடற்படையினர் யாழ். மாவட்ட கடற்றொழில் மற்றும் நீரியல்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர். ஒப்படைக்கப்பட்ட 10 மீனவர்களையும் பருத்தித்துறை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கையினை கடற்றொழில் நீரியல்வளத் துறையினர் முன்னெடுத்துள்ளனர்.

You might also like