தேசிய வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு கிளிநொச்சியில் போட்டி நிகழ்வுகள்

தேசிய வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு கிளிநொச்சி, கரைச்சிப் பிரதேச சபையின் முரசுமோட்டை பொது நூலகத்தினால் நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசில் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

குறித்த நிகழ்வு முரசுமோட்டை பொது நூலகத்தின் நூலகர் பபிதா சிறிகாந்தன் தலைமையில் நேற்று முரசுமோட்டை பொது நூலக வளாகத்தில் நடைபெற்றுள்ளது.

இதன்போது, மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள், வாசகர்களிடையே நடத்தப்பட்ட கலை இலக்கிய போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசில்களையும், சான்றிதழ்களையும் கரைச்சிப் பிரதேச செயலாளர் கோ.நாகேஸ்வரன் வழங்கி வைத்துள்ளார்.

 

அத்துடன், முரசுமோட்டை அமெரிக்கன் இலங்கை மிசன் திருச்சபை முன்பள்ளி மாணவர்களினதும், முருகானந்தா ஆரம்பப் பாடசாலை மற்றும் முரசுமோட்டை புனித அந்தோனியார் றோ.க.வித்தியாலயம் மாணவர்களின் கலை நிகழ்களும் நடைபெற்றுள்ளன.

இந்த நிகழ்வில் கருத்து தெரிவித்த கண்டாவளை பிரதேச செயலாளர் கோ.நாகேஸ்வரன்,

வாசிப்பு மனிதனுடைய வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துகின்றது. வாசிப்பினுடைய தேவை தற்கால உலகில் குறைவடைந்து வந்தாலும் மாணவர்களிடையே ஊக்குவிக்கப்பட்டு வருகின்றது.

 

நவீன உலக மாறுதல்கள் இந்த இருபத்தி ஓராம் நூற்றண்டில் மனிதனின் வாசிப்பை மழுங்கடித்து தொலைக்காட்சி சினிமா தொடர்களுக்குள்ளும் கொண்டு சென்று விட்டுள்ளனர்.

கரைச்சி பிரதேச சபையின் உப அலுவலகமாக இதுவரையும் இயங்கி வருகின்ற முரசுமோட்டை உபஅலுவலகம் எதிர்வரும் ஆண்டில் தனியான பிரதேச சபையாக மாற்றம் பெறுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன.

இவ்வாறு மாற்றம் பெறும் போது சகல வசதிகளையும் கொண்ட ஒரு பிரதேச சபையாக மாற்றம் பெறும் என குறிப்பிட்டுள்ளார்.

You might also like