போகவத்தை பகுதியிலுள்ள ஆற்றிலிருந்து சிறுவனின் சடலம் மீட்பு

ஹட்டன் திம்புலபத்தனை போகவத்தை பகுதியிலுள்ள ஆற்றிலிருந்து சிறுவன் ஒருவனின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.போகவத்தையை சேர்ந்த 6 வயதான ராஜேந்திரகுமார் அஸ்வின் என்ற சிறுவனே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.நீதவான் விசாரணகைளுக்காக சடலம் ஆற்றங்கரையில் வைக்கப்பட்டுள்ளதுடன், ஹட்டன் நீதவானுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.நேற்று பிற்பகல் வீட்டிலிருந்து வெளியே சென்றதன் பின்னர் காணமற்போன சிறுவனை உறவினர்களும் பிரதேச மக்களும் இணைந்து தேடியுள்ளனர்.இதனையடுத்து இன்று காலை 6.45 அளவில் சிறுவன் ஆற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டதாக பொலிஸார் கூறினர்ஆ.ற்றங்கரையிலுள்ள கொய்யாமரத்திலிருந்து சிறுவன் தவறி வீழ்ந்திர்க்கக் கூடும் என தோட்ட மக்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.சம்பவம் தொடர்பில் திம்புலபத்தனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like