வவுனியா மத்திய பேரூந்து நிலையத்தில் 10கிலோ கேரளா கஞ்சாவுடன் ஒருவர் கைது

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி 10கிலோ 23கிராம் கேராளா கஞ்சாவினை இ.போ.ச பேரூந்தில் கடத்த முற்பட்ட சந்தேக நபரோருவரை இன்று (18.11.2017) அதிகாலை 12.15மணியளில் வவுனியா மத்திய பேரூந்து நிலையத்தில் வைத்து வவுனியா போதைப்பொருள் தடுப்பு பொலிஸார் கைது செய்துள்ளனர்.

வவுனியா பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் பொலிஸ் நிலைய தலைமை பொறுப்பதிகாரி மஹிந்த வில்லுராட்சி அவர்களின் தலமையிலான பொலிஸார் மத்திய பேரூந்து நிலையத்தில் சந்தேகத்திடமாக நின்ற யாழ்ப்பாணம் கொடிகாமத்தை சேர்ந்த வேலுப்பிள்ளை மாலதீபன் (வயது – 33) என்பவரின் பயணப்பொதியினை சோதனையிட்ட சமயத்தில் 10கிலோ 23கிராம் கேராளா கஞ்சாவினை கைப்பற்றியுள்ளனர்.

மேலதிக விசாரணைகளின் பின்னர் வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் ஆயர்படுத்தவுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.

You might also like