இலங்கை போக்குவரத்து சபை வவுனியா சாலையின் பணிப்புறக்கணிப்பு முடிவு

இலங்கை போக்குவரத்து சபையின் வட பிராந்திய முகாமையாளரையும் வட பிராந்திய பாதுகாப்பு முகாமையாளரையும் இடமாற்றக்கோரி இன்று (18.11.2017) காலை முதல் தொடர்ச்சியாக இலங்கை போக்குவரத்து சபையின் வவுனியா சாலை ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். 

அதனைத்தொடர்ந்து இ.போ.சபையின் வவுனியா சாலைக்கு விரைந்த ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் வாசல அவர்கள் இவர்கள் இருவரையும் ஒரு வாரத்தினுள் வடமாகாணத்திலிருந்து இடமாற்றம் செய்வதாகவும் இந்த இடமாற்றம் இடம்பெறதா பட்சத்தில் தானும் இ.போ.ச ஊழியர்களின் தொழிற்சங்க போராட்டத்தில் இணைந்து கொள்வதாவும் தெரிவித்தார்.

இவ் வாக்குறுதிகள் நிறைவேறாத பட்சத்தில் வடமாகாணம் தழுவிய போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாகவும் இன்று மேற்கொள்ளப்பட்ட பணிப்புறக்கணிப்பு காரணமாக பாதிக்கப்பட்ட மக்களிடம் மன்னிப்பு கோருவதாக வட பிராந்திய ஒன்றினைந்த தொழிற்சங்கத்தின் தலைவர் இராசரத்தினம் வாமதேவன் தெரிவித்தார்.

தற்போது வவுனியா மத்திய பேரூந்து நிலையத்திலிருந்து வவுனியா சாலைக்கு சொந்தமான அனைந்து பேரூந்துகளும் சேவையில் ஈடுபடுகின்றன.

You might also like