சாந்தபுரத்தின் சந்தையை நிரந்தரமாக அமைத்து தாருமாறு மக்கள் கோரிக்கை

கிளிநொச்சி – சாந்தபுரம் பகுதியில் அமைந்துள்ள சந்தையை நிரந்தரமாக அமைத்து தருமாறு பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது தொடர்பில் மக்கள் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

கடந்த மாதம் குறித்த பகுதியில் பிரதேச மக்களால் புதிதாக உருவாக்கப்பட்ட சந்தையை பிரதேச சபையினரால் நிரந்தர சந்தை தொகுதியாக மாற்றியமைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்க வேண்டும்.

குறித்த பகுதியில் வசிக்கும் சுமார் 800 குடும்பங்களின் கொள்வனவுகளிற்காகவும், அந்த பகுதியில் உள்ள விவசாயிகளின் சந்தைப்படுத்தல் உள்ளிட்டவற்றை கவனத்தில் கொண்டு இந்த சந்தையை நிரந்தர சந்தையாக மாற்றம் செய்ய வேண்டும்.

இதுவரை காலமும் விவசாயிகள் தமது உற்பத்தி பொருட்களை 3 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள இரணைமடு சந்தை மற்றும் 6 கிலோ மீற்றரில் உள்ள கிளிநொச்சி சந்தைகளிற்கும் எடுத்துச்சென்று சந்தைப்படுத்த வேண்டியுள்ளது.

இதேவேளை தமது அன்றாட தேவைகளிற்காக குறிதத் சந்தைகளிற்கும் சென்று பொருட்களை கொள்வனவு செய்ய வேண்டிய நிலை காணப்படுகின்றது.

இந்த நிலையில் அதிக குடும்பங்கள் வசிக்கும் தமது கிராமத்திற்கான சந்தை ஒன்றை அமைப்பதற்கு பலமுறை கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. எமது கோரிக்கையினை ஏற்று சந்தை அமைப்பதற்காக எவரும் முன்வராத நிலையில் நாம் இந்த பகுதியில் சந்தை ஒன்றை அமைத்துள்ளோம்.

அத்துடன் பிரதேச செயலாளர் தற்போது அமைந்துள்ள சந்தை காணியானது கூட்டுறவு சபையினருக்கு நீண்ட கால குத்தகைக்கு வழங்கப்பட்டதாக கடிதம் அனுப்பியுள்ளார்.

பிரதேச சபை செயலாளரும் இந்த விடயம் தொடர்பில் கரிசனை காட்டவில்லை. தமது கிராமத்திற்கான சந்தை அமைப்பதற்கு இந்த பகுதியை ஒதுக்கி தருமாறும், இல்லை என்றால் பொருத்தமான பகுதி ஒன்றை தமக்கு தந்து தமது தேவைகளை பூர்த்தி செய்வதற்கு உதவுமாறும் மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

You might also like