இரணைமடுவில் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் பராமரிப்பின் கீழ் உள்ள காணிகளின் அளவீட்டு பணிகள்

கிளிநொச்சி, இரணைமடு பகுதியில் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் பராமரிப்பில் உள்ள அரச காணி அளவீட்டு பணிகள் இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

மீள்குடியேற்றத்தின் பின்னர் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் இருந்த குறித்த காணி பின்னர் இராணுவ சிவில் பாதுகாப்பு திணைக்களத்தினரால் பராமரிக்கப்பட்டு வந்துள்ளது.

தற்போது அளவீடு செய்யப்படும் குறித்த காணியில் பொதுமக்களின் காணிகளும் உள்ளடங்குவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் குறித்த காணிகளை தற்போது அளவீடு செய்வதற்கான நோக்கம் என்ன என்பது தொடர்பில் பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

You might also like