வவுனியாவில் சுகாதார மேம்பாட்டு பரிசளிப்பு விழா – 2017

கிராம மட்டகுழுக்களை வலுவூட்டும் முகமாக  அனைத்து கிராமமட்ட குழுக்களிலும் இருந்து டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளில் சிறப்பாக செயற்பட்டவர்களுக்கும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நாளை (20.11) திங்கள் கிழமை காலை 09.30 மணியளவில் வவுனியா நகரசபை கலாச்சார மண்டபத்தில் இடம்பெற இருப்பதால் கிராம அபிவிருத்திச்சங்க உறுப்பினர்கள் , மகளீர் அபிவிருத்தி உறுப்பினர்கள் (RDS, WRDS) மற்றும் அனைவரையும் தவறாது கலந்து கொள்ளுமாறு  வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினர் கேட்டுக் கொள்கின்றார்கள்.

வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் இவ்வருடம் டெங்கு நோயின் தாக்கம் அதிகமாக காணப்பட்டதால் அதனை  கட்டுப்படுத்துவதற்காக பல்வேறுபட்ட வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

அவற்றில் பாடசாலை மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக டெங்கு தொடர்பான சித்திர மற்றும் கட்டுரைப் போட்டிகள் நடாத்தப்பட்டு அவர்களை ஊக்குவிக்கும் முகமாக சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளன.

அத்துடன் பாடசாலைகள் மற்றும் திணைக்களங்கள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் என்பவற்றின் சுகாதார நிலைமைகளை மேம்படுத்துவதற்காக பல்வேறுபட்ட வேலைத்திட்டங்களும் கடந்த சில மாதங்களாக முன்னெடுக்கப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.

You might also like