கிளிநொச்சியில் ஆபத்தான முறையில் வாகனங்களை செலுத்தியவர்களுக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

காப்புறுதிப்பத்திரம் இன்றி வாகனம் செலுத்தியவருக்கு 6, 500 ரூபா தண்டப்பணம்

கிளிநொச்சி – ஏ-9 வீதியில் காப்புறுதிப்பத்திரம் இன்றி வாகனம் செலுத்தியவருக்கு 6, 500 ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த சந்தேநபரை கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றில் நேற்று முன்னிலைப்படுத்தியே போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், கிளிநொச்சி ஏ-9 வீதியில் காப்புறுதிப்பத்திரமின்றியும், வரிப்பத்திரமின்றியும் மோட்டார் சைக்கிள் செலுத்திச்சென்ற ஒருவரை கைது செய்த கிளிநொச்சி பொலிஸார் அவருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்ததாக குறிப்பிடப்படுகின்றது.

ஆபத்தான முறைகளில் வாகனங்களைச் செலுத்திய 6 பேருக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

கிளிநொச்சி – தருமபுரம் மற்றும் பளை ஆகிய பகுதிகளில் ஆபத்தான முறைகளில் வாகனங்களைச் செலுத்திச் சென்ற ஆறு பேருக்கு தலா மூவாயிரம் ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த நபர்களை கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றில் நேற்று ஆஜர்படுத்திய போதே இந்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

தருமபுரம் பகுதியில் ஆபத்தான முறையில் வாகனம் செலுத்திய ஒருவரையும், கிளிநொச்சி நகரை அண்மித்த பகுதிகளில் ஆபத்தான முறையில் வாகனங்களை செலுத்திய இரண்டு பேரையும்இ பளைப்பகுதியில் ஆபத்தான முறையில் வாகனங்களை செலுத்திச் சென்ற மூன்று பேரையும் பொலிஸார் கைது செய்து, வழக்கு பதிவு செய்துள்ளனர்.

மதுபோதையில் வாகனம் செலுத்திய 6 பேருக்கு சாரதி பத்திரங்கள் இடைநிறுத்தம்

கிளிநொச்சி மற்றும் தருமபுரம் ஆகிய பகுதிகளில் மதுபோதையில் வாகனம் செலுத்திய 6 பேருக்கு தலா ஆறாயிரம் ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டதுடன்,சாரதியனுமதிப் பத்திரங்கள் நான்கு மாதங்களுக்கு இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

குறித்த சந்தேகநபரை கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றில் நேற்று ஆஜர்படுத்திய போதே இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சிப் பகுதியில் மதுபோதையில் வாகனம் செலுத்திச் சென்ற ஆறு பேரை கைது செய்து அவர்களுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

You might also like