கொழும்பில் துப்பாக்கிச் சூடு!

கொழும்பு – புஞ்சிபொரளையில் இன்று அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் நபரொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

புஞ்சிபொரளை – பீ.டபிள்யூ. ப்ரணாந்து மாவத்தையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதில் முச்சக்கரவண்டியில் சென்று கொண்டிருந்த நபரொருவர் மீதே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உயிரிழந்த நபர் இதுவரை அடையாளம் காணப்படவில்லை எனவும், மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

You might also like